
உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்கள் பாதுகாப்பான Passwordஐயே பயன்படுத்தவாதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது முற்றிலும் தவறு. இதை எப்படி நம்புவது என்னும் சந்தேகம் உங்களுக்கு எழலாம். இத்தகவலை சொன்னவர் யார் என்பது தெரிந்தால் உங்களுக்கு அந்த சந்தேகம் தீர வாய்ப்பிருக்கிறது. முன்னாள் National Instiitute Of Standardsன் அதிகாரியும் தற்போது நாம் பயன்படுத்தி வரும் Passwordமுறையான ஆங்கில எழுத்துக்களில் உள்ள Upper case lower case மற்றும் சில அடையாளக் குறிகளையும் பயன்படுத்துவதையும் பரிந்துரைத்த Bill Burr தான் இப்படிக் கூறியுள்ளார். எந்த ஒரு இணையதளமாக இருந்தாலும் அதில் புதிய கணக்கை துவங்கும் போது அதில் Passwordஐ பயன்படுத்த வேண்டியிருக்கும். Upper Case பயன்படுத்துங்கள் lower case எழுத்துக்களை பயன்படுத்துங்கள், குறீயீடுகளை பயன்படுத்துங்கள் என கேட்கும். ஒரு எழுத்தை தவற விட்டாலும் ஏற்றுக்கொள்ளாமல் திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கும். நாமும் இது தான் நமக்கு பாதுகாப்பு என நினைத்து அவை கேட்பது போல நமது Passwordஐ நிர்ணயிப்போம்.

கடந்த 2003ம் ஆண்டு National Institute Of Standardsல் பணியாற்றிக் கொண்டிருந்த Bill Burr, அப்போது அந்நாட்டு அரசு பணியாளர்கள் அனைவருக்கும் ஒரு சில பரிந்துரைகளைச் செய்தார். அதன் படி ஆங்கிலத்தில் உள்ள Upper case, Lower Case, Special Characters எனப்படும் சிறப்புக் குறியீடுகள் மற்றும் எண்களைப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறினார். அப்போது தான் Hackerகளிடம் இருந்து நம் கணக்கை பாதுகாக்க முடியும் என தெரிவித்தார். பின்னர் அது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இணையதளத்தை வடிவமைப்பவர்கள் அனைவரும் இம்முறையையே கட்டாயமாக்கும் விதமாக தங்கள் இணையதளத்தை வடிவமைத்தனர். வடிவமைத்துகொண்டும் உள்ளனர். ஆனால் அது முற்றிலும் பயனற்றது என்றும், அதை வடிவமைத்ததிற்காக வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார் 72வயது Bill Burr
சரி அப்போது பாதுகாப்பான வழிமுறை தான் எது?
அதற்கான வழிமுறைகளை வடிவமைக்கத் தொடங்கிவிட்டது National Institute of Standards. பலவிதாமான எழுத்துக்கள் குறியீடுகள் மற்றும் எண்களைப் பயன்படுத்தி எழுதப்படும் 10 இலக்க Passwordகளை விட 20 அல்லது 25இலக்கங்களைக் கொண்டு ஒரே சீரான எழுத்துக்களால் எழுதப்பட்ட Password மிகவும் பாதுகாப்பானது என தெரியவந்துள்ளது.

அதற்கான உதாரணமும் தற்போது வெளியிடப்படுள்ளது. Troubledoor எனும் இந்த வார்த்தை தற்போது நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் முறையை மிகச்சரியாக பிரயோகித்து எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதே சமயம் அதன் போட்டியாக correct horse battery staple எனும் வார்த்தை மிகச் சாதாரணமாக அதே சமயம் நீளமானதாக உள்ளது. இவை இரண்டையும் தற்போதைய நவீன கணித Cryptography முறையைப் பயன்படுத்தி கண்டறிய முயன்றால் Troubledoorஐ மூன்றே நாட்களில் கண்டறிந்துவிட முடியும் என்றும் correct horse battery stapleஐ கண்டறிய 550 ஆண்டுகள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக இலக்கங்கள் இருப்பதால் கடினத்தன்மையும் அதிகரிக்கும். குறைந்த இலக்கங்களை எளிதாக பிரித்தறிந்து விடலாம் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.
அதே போல 30 நாட்களுக்கு ஒரு முறை Passwordஐ மாற்றுவது போன்ற வழிமுறைகளும் பயனற்றது என்றும் தெரியவ்ந்துள்ளது. இனி விரைவில் இந்த பழைய முறை மாறி புதிய முறையிலான Passwordவிதிமுறைகளை அனைத்து இணையதளங்களும் பயன்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.