போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்திய சந்தையில் கடந்த அக்டோபர் மாதம் போட் நிறுவனம் ஸ்டாம் ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்ததை அடுத்து, தற்போது எனிக்மா வகை ஸ்மார்ட் வாட்சகளை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE- மோட்டோவின் பட்ஜெட் விலை ஸ்மார்ட் ஃபோன்கள்!
இந்த எனிக்மா வகை ஸ்மார்ட் வாட்சில் 1.54 இன்ச் டிஸ்பிளே, இதய துடிப்பிற்கான சென்சார், 8 ஸ்போர்ட்ஸ் மோட்கள், 3 ஏடிஎம் வாட்டர் ரெசிடண்ட் போன்ற அசத்தல் அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
எனிக்மா ஸ்மார்ட் வாட்சின் அசத்தல் அம்சங்கள்:
- க்ளவுட் வாட்ச் பேஸ்கள்
- 230 எம்ஏஹெச் பேட்டரி
- தூக்கத்தை ட்ராக் செய்யும் வசதி
- ப்ளூடூத் 4.2
- அலர்ட் வைப்ரேஷன்
- வாட்டர் ரெசிடண்ட்
- இதய துடிப்பு சென்சார்
- இரத்த காற்றோட்டத்தை டிராக் செய்யும் வசதி
- ரிமோட் கேமரா
- மியூசிக்கல் கண்ட்ரோல்
எனிக்மா இந்திய சந்தையில் சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை தற்போது ரூ. 2999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விற்பனை அமேசான் ஆன்லைன் தளத்தில் கிடைக்கிறது.