பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலையில் ப்ரீப்பெய்ட் சலுகைகளை அறிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலையில் ப்ரீப்பெய்ட் சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் ரூ. 199 பீரிப்பெய்ட் சலுகையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சலுகை மூலமாக பயனாளர்கள் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள், வாய்ஸ் கால் 250 நிமிடங்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர ரூ. 998 விலையின் சலுகைகளையும் மாற்றுவதாக அறிவித்துள்ளது.
READ MORE- சாம்சங் கேலக்ஸியின் ப்ரோ பட்ஸ் விலை விவரங்கள் வெளியானது!
அந்த வகையில், தினமும் 2 ஜிபி டேட்டாவிற்கு பதிலாக 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது 240 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இந்த சலுகை மாற்றம் கேரளா ட்விட்டர் பக்கத்திலும் ரூ. 199 சலுகை ராஜஸ்தான் ட்விட்டர் வட்டாரத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற் கட்டமாக அங்கு செயல்படுத்திய பின்பு நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என தெரிகிறது.