
ட்விட்டர் சமூக வலைதளம் இனி எல்லோருக்கும் இலவசம் கிடையாது என்று தெரிவித்துள்ள எலான் மஸ்க், அதற்கான கட்டணங்களை வகுத்திட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
உலகின் முதல்நிலை பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க், சமீபத்தில் பிரபல சமூக ஊடகமான ட்விட்டர் நிறுவனத்தை சொந்தமாக வாங்கிக் கொண்டார். விரைவில் அந்த தளத்தை பயன்படுத்தி அவர் வருவாய் ஈட்டுவதற்கான திட்டங்களை செயல்படுத்துவார் என்று கூறப்படுகிறது.
எனினும் சாமானிய மக்கள் ட்விட்டரை கட்டணமில்லாமல் பயன்படுத்தலாம், அரசியல் ஊழியர்கள் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்காக பயன்படுத்துபவர்கள் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டியது வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இதுதொடர்பாக பேசிய எலான் மஸ்க், ட்விட்டரை அடுத்த தளத்துக்கு கொண்டுச் செல்ல நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதற்கான முதற்கட்ட செயல்பாடுகளை துவங்கியுள்ளேன். கட்டணம் செலுத்தி ட்விட்டரை பயன்படுத்துவதன் மூலம் கருத்துச் சுதந்திரம் காக்கப்படும். என்னை மோசமாக விமர்சிப்பவர்கள் கூட ட்விட்டரில் தொடர்ந்து நீடிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.