ஃபிட்பிட் ஸ்மார்ட் வாட்ச் பயனாளர்கள், வாட்ச் இசிஜியில் குறைபாடு இருப்பதை சுட்டி காட்டியுள்ளனர்.

ஃபிட்பிட் வாட்ச் பயனாளர்கள் தங்களுடைய ஸ்மார்ட் வாட்சில் இசிஜி பயன்பாட்டில் குறைகள் இருப்பதை சுட்டி காட்டியுள்ளனர்.
இசிஜி அம்சம் சீராக இயங்காமல் இருக்கும் பயனாளர்களுக்கு புதிய யூனிட்டுகளை வழங்குவதாக ஃபிட்பிட் அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஃபிட்பிட் வாட்ச் இசிஜி வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது ஃபிட்பிட் நிறுவனத்தின் இசிஜி வசதியுடன் கூடிய முதல் ஸ்மார்ட் வாட்ச் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் மாதத்திலிருந்து தற்போது வரை வெளியான ஸ்மார்ட் வாட்ச்களில் 900 வாட்களில் இந்த இசிஜி யூனிட்டில் குறைபாடு இருப்பது பயனாளர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ ALSO- அதிக அளவில் புதிய வாடிக்கையாளர்களை பெற்ற ஏர்டெல்!
மேலும், இது போன்ற குறைபாடுகள் வரும் காலத்தில் இனி ஏற்படாது எனவும் அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.




