நெட்பிளிக்ஸில் புதிய இலவச சேவை திட்டத்தை தொடங்கியுள்ளதால் பயனாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது. இதற்கேற்ப பல்வேறு மாற்றம் அதிகரிக்கிறது. அந்த வகையில் ஓடிடி தளத்தின் மதிப்பு வெகுவாக பிரபலமடைந்துள்ளது.
குறிப்பாக இன்று முக்கிய நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குநர்களே நெட் பிளிக்ஸில் திரைபடங்கள் இயக்கி வெளியிடுகின்றனர். இது வீட்டிலிருந்தோ அல்லது இருந்த இடத்தில் இருந்தோ தாங்கள் பார்க்க விரும்பொய நிகழ்ச்சியை பார்க்க முடிகிறது.
இதனால் அதிக எண்ணிக்கையில் நெட் பிளிக்ஸை பயனாளர்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.
இந்நிலையில் நெட்பிளிக்ஸ் தனது பயனாளர்களுக்கு வார இறுதியில் இலவச சேவையைத் தர நெட்பிளிக்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும் இந்தச் சேவை இந்தியாவில் இருந்து தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நெட்பிளிக்ஸில் உள்ள பயனாளர்களுக்கும் பயனுள்ளதாகவும் பல புதிய பயனாளர்களின் signup -ஐ அதிகரிக்கவும் அவர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் வகையிலும் இதில் பல புதிய அம்சங்கள் இடம்பெறவுள்ளதகவும் தெரிகிறது.
இந்தியா போன்ற நாடுகளில் 30 நாட்கள் இலவச சேவையை நெட்பிளிக்ஸ் வழங்கி வருகிறது.