ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்ஃபோனான ஒன்பிளஸ்9 5ஜி விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
பயனர்கள் இடையே அதிகம் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்ஃபோனான ஒன்பிளஸ்9 5ஜியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புகைப்படங்களில் ஃபிளாட் டிஸ்பிளே, பன்ச் ஹோல் கட் அவுட் போன்றவைகளை கொண்டுள்ளது.
READ MORE- நோக்கியாவின் முதல் லேப்டாப் அறிமுகம்!
மேலும் இந்த ஸ்மார்ட்ஃபோனுடன் ஒன்ப்ளஸ் 9 ப்ரோ மற்றும் ஒன்ப்ளஸ் 9இ மாடல்களும் அறிமுகம் செய்ய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. ஒன்ப்ளஸ் நிறுவனம் தனது ஒன்ப்ளஸ் சீரிஸ் மொபைல்களில் கேமராவில் கவனம் செலுத்தி வருவதால் இதிலும் மூன்று கேமரா சென்சார்களும் பிளாஷ் யூனிட் கேமரா மாட்யூலும் வழங்கப்படும்.
இதன் சிறப்பம்சங்கள்:
- 6.55 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080*2400 பிக்சல் டிஸ்பிளே
- 4500 எம்ஏஹெச் பேட்டரி
- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்
- ஒன்பிளஸ் 8டி தோற்றம்
- வித்தியாசமான ஒன்பிளஸ் லோகோ