ரியல்மி கியூ2 ஸ்மார்ட்ஃபோன் விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கும் ரியல்மி கியூ2 ஸ்மார்ட்ஃபோன் குறித்தான விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
READ MORE- ஜியோவை முந்திய ஏர்டெல். எதில் தெரியுமா?
RMX2117 எனும் மாடல் கொண்டு உருவாகி வரும் இந்த ஸ்மார்ட்ஃபோன் விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருப்பதால் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கலாம். இதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.
ரியல்மி கியூ2-ன் சிறப்பம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் டிஸ்பிளே
- மீடியா டெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர்
- 6 ஜிபி ரேம்
- 128 ஜிபி மெமரி, மெமரியை நீட்டிக்கும் வசதி
- 48 எம்பி பிரைமரி கேமரா
- 8 எம்பி அல்ட்ரா வைல்ட் லென்ஸ்
- டூயல் பேண்ட் வைஃபை
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
சீன சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடல் விலை ரூ. 1299 RMB எனவும், இந்திய சந்தையில் ரூ. 14,000 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.