சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக அலவிளான ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது. சாம்சங் நிறுவனம். வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து ஒவ்பொறு முறையும் மேம்படுத்தப்பட்ட திறன் கொண்ட ஸ்மார்ட் போன்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவலலின்படி, சாம்சங் நிறுவனம் பிரீமியம் மிட்-ரேன்ஜ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் SM-F415 எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதாகவும், வைபை அலையன்ஸ் சான்று பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனம் இந்த புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை விரைவில் சந்தைப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தற்போதைய தகவல்களின் படி புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும், இந்த ஸ்மார் போன் பச்சை,நீலம் மற்றும் கருப்பு என மூன்று நிறங்களில் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.