நாய்ஸ் கலர்ஃபிட் நேவ் ஸ்மார்ட்வாட்ச் அமேசான் இந்தியாவில் பிரத்தியேகமாக விற்பனையில் உள்ளது. இந்த வெளியீடு அமேசான் பிரைம் டே 2020 விற்பனையின் ஒரு பகுதியாக இருக்கும்,

இதன் டீசர் வெளியீட்டில்புதிய ஸ்மார்ட்வாட்ச் அணிந்து பிராண்ட் தூதர் ரோஹித் சர்மா போஸ் கொடுத்திருந்தார். மேலும், ஸ்மார்ட்வாட்ச் உள்ளமைக்கப்பட்ட ஜி.பி.எஸ் உடன் வரும் என்பதையும் வலைத்தளம் பகிர்ந்துள்ளது.
நாய்ஸ் கலர்ஃபிட் நேவ் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 4499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், அமேசான் பிரைம் டே விற்பனையின் போது இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 3999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

1.4 இன்ச் 320×320 பிக்சல் எல்சிடி ஸ்கிரீன்
– ப்ளூடூத் 4.2
குறைந்த எடை, இம்கேட்-ரெசிஸ்டண்ட், பாலிகார்போனேட் ஷெல் மற்றும் சிலிகான் ஸ்டிராப்
– கிளவுட் சார்ந்து இயங்கும் கஸ்டமைஸ் செய்யக்கூடிய வாட்ச் ஃபேஸ்கள்
– 6-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், இன்-பில்ட் ஜிபிஎஸ், ஸ்லீப் டிராக்கிங்
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
– 24×7 இதய துடிப்பு சென்சார்
– அழைப்புகள், டெக்ஸ்ட், ஆப் மற்றும் சமூக வலைதள நோட்டிஃபிகேஷன்கள்
– 180 எம்ஏஹெச் பேட்டரி
இதில் 10 விதமான ஸ்போர்ட்ஸ் மோட் உள்ளன. அதாவது வாக்கிங், சைக்ளிங், டான்சிங், பேட்மிண்டன், யோகா, ரன்னிங், ஸ்ட்ரென்த் டிரெயினங் உள்ளிட்ட மோட்கள் உள்ளன. இது அந்தந்த மோடுக்கு ஏற்றவாறு தகவல்களை துள்ளியமாகவழங்கும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .