இணைப் பக்கத்தினை வீடியோவாக மாற்றும் கூகுளின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்.
செயற்கை நுண்ணறுவுத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட வசதிகளை அறிமுகம் செய்வதில் கூகுல் நிறுவனம் முன்னணியில் திகழ்கின்றது. இந்நிறுவனம் தற்போது இணையப் பக்கங்களை வீடியோவாக மாற்றக்கூடிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஒன்றினை உருவாக்கியுள்ளது.
இத்தொழில்நுட்பமானது URL2Video என அழைக்கப்படுகின்றது. அதாவது இணையப் பக்கம் ஒன்றின் முகவரியினை (URL) உள்ளீடு செய்ததும் அப்பக்கத்தினை அசைப்பதற்கு ஏற்றவாறு ஒரு வீடியோவாக பதிவு செய்து பெற முடியும். தற்போது இவ்வசதி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. விரைவில் பயனர்களின் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.