மெட்ரோ ரயில் திட்டம் சென்னை மாநகரில் நீட்டிப்பு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை :
சென்னை மாநகரின் எதிர்கால போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பூந்தமல்லியில் இருந்து திருமழிசை வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் 118 கிலோமீட்டர் தொலைவுக்கு,மாதவரம்-சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி, மாதவரம்- சிப்காட் ஆகிய மூன்று வழித் தடங்களில் மேற்கொள்ளப்பட உள்ளன. கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி இடையேயான திட்டப் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, இந்த திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
Read more – 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பு : பெற்றோரிடம் கருத்து கேட்பு
இந்த நிலையில் இத்திட்ட்த்தில் செயற்கைகோள் நகரமாக திருமழிசையை இணைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை மாநகரின் எதிர்கால போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது.