ட்விட்டரில் வாய்ஸ் ட்வீட் பதிவிடும் புது வசதியை ட்விட்டர் நிறுவனம் அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது.
வாட்சப் போன்ற சமூக வலைதள செயலிகளில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதி போன்று இவ்வளவு நாளாக ட்விட்டரில் இல்லாமல் இருந்தது. தற்போது அந்நிறுவனம் வாய்ஸ் ட்வீட் அனுப்பும் புதிய வசதியை ஐ போனில் அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் இந்த வசதி ஆண்ட்ராயிட் போன்களிலும் வரவிருக்கிறது. வாய்ஸ் ட்வீட்களை அதற்கான கேப்ஷன் உடன் பகிரும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
பொதுவாகவே ட்விட்டரில் தான் அதிகமாக கருத்து மோதல்கள் நடைபெறும் வாய்ஸ் ட்வீட் வந்த பிறகு இந்த கருத்து மோதல்கள் எந்த அளவிற்கு இருக்கும் என போக போகத் தான் தெரியும்.