பலகோடி பயனர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பத்து கோடி பயனர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டார்க் வெப் தளத்தில்தான் பயனர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது. இதில் பயனாளர்களின் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமேசான், ஸ்விகி, மேக் மை ட்ரிப் உள்ளிட்ட நிறுவனங்களின் பணப்பரிமாற்ற முறையை கையாளும் ஜஸ்பேவுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
READ MORE- ஆப்ஸ்டோரில் இருந்து செயலிகளை நீக்கிய ஆப்பிள்!
கடந்த மார்ச் 2017ல் இருந்து 2020 வரை நடந்த பணப்பரிமாற்ற விவரங்களும் இந்த இணையத்தில் வெளியாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிகிறது.




