தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு நிறுவனம் இந்தியாவில், மீண்டும் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்கொரிய நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு இந்தியாவில் பெரும் பயனாளர்களை கொண்டிருந்த பப்ஜி வீடியோ கேமின், செல்லிடபேசி பதிப்பை இந்தியாவில் அறிமுகம் செய்து நிா்வகிக்கும் உரிமத்தை சீனாவின் டென்சென்ட் கேம்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது.
சீனா உடன் கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, தேச பாதுகாப்பு கருதி பப்ஜி விளையாட்டு உள்பட சீனா தொடா்புடைய 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இந்நிலையில் இந்தியப் பயனர்களுக்காக பப்ஜி மொபைல் நிறுவனம் பப்ஜி மொபைல் இந்தியா என்ற புதிய விளையாட்டை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதற்கென தரவு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை உறுதி செய்வதற்காக இந்திய பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை சேமித்து வைக்கும் தரவு சேமிப்பு அமைப்புகளை இந்தியாவில் நிறுவ அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய பப்ஜி விளையாட்டுக்காக அந்நிறுவனம் ரூ.740 கோடி முதலீட்டை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளது. பப்ஜியின் இந்த அறிவிப்பு இந்தியாவின் பப்ஜி பயனாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.