வாட்ஸப் பிரைவசி விவகாரத்தில் மேற்கொள்ள பட்ட ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த சில வாரங்களாக வாட்ஸப்பின் ப்ரைவசி குறித்தான விவரம் பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வாட்ஸப் விளக்கம் அளித்தும் பயனர்களிடையே சர்ச்சையே நிலவியது.
இந்த நிலையில் வாட்ஸப்புக்கு மாற்றாக சிக்னல், டெலிகிராம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையில் சமீப காலங்களில் அதிகமாகியுள்ளது. இந்த பிரைவசி சர்ச்சைகளுக்கு பிறகு மேற்கொள்ள பட்ட ஆய்வில் வெறும் 18 சதவீதம் மட்டுமே வாட்ஸப்பை தொடர்ந்து பயன்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
READ MORE- சிக்கல்களை தாண்டி பயன்பாட்டுக்கு வந்தது சிக்னல்!
24,000க்கும் அதிகமான மக்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வில் 26 சதவீதத்திற்கும் அதிகமானோர் வாட்ஸப்க்கு மாற்றான செயலியை பயன்படுத்துவதில் ஆர்வம் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு உள்ளாக மட்டும் வாட்ஸப் டவுண்லோட் எண்ணிக்கை 35 சதவீதம் சரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.