பென்சன் வாங்குபவர்கள் வாழ்நாள் சான்றிதழை எளிதாக சமர்ப்பிக்க புதிய வசதியை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பென்சன் வாங்கும் அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயமாகும். இதனை சமர்ப்பித்தால்தான் பென்சன் கிடைக்கும். இந்நிலையில், பென்சன் வாங்குபவர்கள் வாழ்நாள் சான்றிதழை எளிதாக சமர்ப்பிக்கும் வகையிலும், அலைச்சலை தவிர்க்கும் வகையிலும் முகம் பதிவு செய்யும் வசதியை இபிஎப்ஓ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இனி இபிஎப்ஓ நிறுவனத்தில் பென்சன் வாங்குபவர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த புதிய வசதி மூலம் 65லட்சம் பேர் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
-பா.ஈ.பரசுராமன்.




