அரசு விரைவுப் பேருந்துகளில் நாளை முதல் (ஆகஸ்டு 3) பார்சல் சேவை தொடங்குகிறது.
தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்துகளில் நாளை முதல் (ஆகஸ்டு 3) பார்சல் சேவை தொடங்குகிறது. முதல் கட்டமாக 7 நகரங்களில் இருந்து பார்சல் சேவை சென்னைக்கு வழங்கப்படுகிறது. மாதம் மற்றும் தினசரி வாடகை அடிப்படையில் பார்சல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி, மதுரை,திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, கோயம்புத்தூர், ஓசூர் ஆகிய நகரங்களில் இருந்து 80 கிலோவரை பொருட்களை அனுப்பலாம்.
நெல்லை, தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு அனுப்ப கட்டணம் ₹390 கோயம்பேடு பஸ் நிலையத்தில் பார்சலை பெற்றுக் கொள்ள வேண்டும். இதேபோல் 7 நகரங்களுக்கும் பார்சல் சேவை வழங்கப்படுகிறது. மாத வாடகையில் பொருட்களை அனுப்புவோருக்கு மாதாந்திர பாஸ் வழங்கப்படும். எந்தெந்த நேரத்தில் பொருட்களை அனுப்புகிறார்களோ அந்த தேதி டிக் செய்யப்படும். மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாளரை அணுகவும்.
-பா.ஈ.பரசுராமன்.