தேவையான ஆவணங்கள்:
விண்ணப்பதாரரின் போட்டோ
ரேஷன் கார்டு
ஆதார்கார்டு
வங்கிசேமிப்பு கணக்கு புத்தகம்

ஆன்லைனில் விண்ணப்பிக்கு முறை:
முதலில் https://tnega.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று குடிமக்களுக்கான சேவைகள் (citizen services) பகுதியை கிளிக் செய்ய வேண்டும். (தேவையெனில் தமிழ்மொழியை தேர்தெடுத்துக் கொள்ளலாம்) இதில் கணக்கு வைத்துள்ளவர்கள் பாஸ்வேர்டு கொடுத்து உள்ளே நுழையலாம். இல்லையெனில் புதிய பாஸ்வேர்டு கொடுத்து லாகின் செய்யவும். லாகின் செய்தவுடன் ரெவன்யூ டிபார்ட்மெண்ட் என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். பிறகு புரசீடு பட்டனை கிளிக் செய்யவும்.
ரெஜிஸ்டர் கேன் என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்து அதில் வரக்கூடிய விண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பதாரரின் பெயர், முகவரி, ஆதார் எண்,மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை நிரப்ப வேண்டும். பின் மொபைலுக்கு வரும் ஓடிபியை உள்ளீடு செய்ய வேண்டும். பிறகு வங்கி கணக்கு தொடர்பான விவரங்களை அளித்து விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். செலுத்தியவுடன் இதற்கான ஒப்புகை சீட்டு கிடைக்கும்.
குறிப்பிட்ட கால இடைவெளியில் விஏஒ மற்றும் ஆர்ஐ அலுவலகங்களில் இருந்து முகவரி தொடர்பான சரிபார்ப்பு பணிக்கு அழைப்பர். அப்போது விண்ணப்பித்த ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் நகலுடன் செல்ல வேண்டும். தாசில்தாரின் ஒப்புதல் கிடைத்தவுடன் உங்களுக்கு உதவித்தொகை கிடைக்கும்.




