தன் வாழ்நாளில் 100 பிள்ளைகளை வளர்க்கவேண்டும் என்று கனவுடன் இருக்கிறார் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர்.
ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா. 23 வயதான இவருக்கு திருமணம் நடந்துவிட்டது. கணவர் பெயர் காலிப். இவர் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த இளம்தம்பதிக்கு தற்போது 11 குழந்தைகள் உள்ளன. அந்த குழந்தைகளுள் ஒரு குழந்தையை மட்டுமே கிறிஸ்டினா பெற்றெடுத்துள்ளார். மீதமுள்ள குழந்தைகளை வாடகை தாய் மூலம் பெற்றதாக தெரிவிக்கிறார் கிறிஸ்டினா. அதுமட்டுமல்லாமல் அவருக்கு மொத்தமாக 105 குழந்தைகள் பெற வேண்டும் என்பது விருப்பமாம். இது முடியாத காரியம் என்பதால் வாடகைத் தாயை நம்பியிருக்கிறார். வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றெடுப்பது ரஷ்யாவில் சட்டப்பூர்வமானது. ஏற்கனவே அவரது கணவர் காலிப்புக்கும் குழந்தைகள் மீது அலாதிபிரியம் தானாம். அதனால் அவரும் கிறிஸ்டியனா விருப்பத்துக்கு தலையசைத்து இருக்கிறார்.