தெற்கு வேல்ஸ் கடற்கரையில் 22 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் காலடி தடத்தை 4 வயது குழந்தை கண்டுபிடித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது.
தெற்கு வேல்ஸ் :
தெற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள பெண்ட்ரிக்ஸ் கடற்கரையில் லிலி வில்டர் என்ற 4 வயது குழந்தை தனது தந்தை ரிச்சர்ட் மற்றும் தாய் சாலி உடன் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த குழந்தையின் கண்களில் கடற்கரையில் டைனோசரின் கால் தடத்தை போன்ற ஏதோ ஒன்று கண்ணுக்கு புலப்படவே இதுகுறித்து லிலி வில்டர் தனது பெற்றோருடன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தொல்லியல் ஆய்வாளர்களிடம் சிறுமியின் குடும்பத்தினர் தகவல் தெரிவித்தநிலையில் நிபுணர்கள் அந்த காலடித்தடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். சுமார் 22 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரின் இந்த கால்தடம் இத்தனை ஆண்டுகளாக கடற்கரையின் உள்ள ஈர மண்ணால் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளதாகவும், டைனோசர்கள் எப்படி தங்களது தடத்தை பதித்துள்ளது என்பது குறித்தும் இதன் மூலம் தெரிகின்றது என்று குறிப்பிட்டுள்ளனர்.
Read more – அதிமுக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வர வாய்ப்பு இருக்கிறது : அமைச்சர் ஜெயக்குமார்
வேல்ஸில் இருக்கும் தேசிய அருங்காட்சியகத்தின் நிபுணர் சிண்டி ஹோவெல்ஸ் இதுகுறித்து கூறுகையில், ‘’இந்த கால்தடம் 10 சென்டிமீட்டர் நீளமும், 75 சென்டிமீட்டர் உயரம் கொண்ட டைனோசரின் கால்தடமாக இருக்கலாம் எனவும், எந்த வகையான டைனோசர் என இதுவரை தெரியவில்லை என்று குறிப்பிட்டார். மேலும், இந்த கடற்கரையில் கிடைத்த கால்தடங்களிலேயே இந்த கால்தடம் தான் மிகவும் சிறந்தது மற்றும் பெரியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.