அமெரிக்காவில் 23 வயது கர்ப்பிணி பெண்ணை முன்னாள் காதலன் ஒருவன் கொலை செய்து பிரிட்ஜில் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த இளம் பெண் 23 வயதான செலினா ஆன் பிராட்லி இந்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை. இரண்டு குழந்தைகளுக்கு தாயான செலினா தற்போது மூன்றாவது குழந்தைக்கு விரைவில் தாயாகவிருந்தார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து அவர் எங்கு தேடியும் கிடைக்காததால் குடும்பத்தினர் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர் காவல் துறையினரும் தேடி வந்தார்கள்.
சந்தேகத்தின் பேரில் கடந்த திங்கள் கிழமை செலினாவின் முன்னாள் காதலனின் வீட்டில் தேடியபோது, செலினா கழுத்து, முகத்தில் படுகாயங்களுடன் சமையலறையில் இருந்த பிரிட்ஜில் கொலை செய்யப்பட்டு பிணமாக வைக்கப்படிருந்தார்.
அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், அவரது முன்னாள் காதலன் வில்லியம் ஜேம்ஸை செவ்வாய் கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர் செலீனாவை அவன் எதற்காக கொன்றான் போன்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை.




