“என்னது சிவாஜி செத்துட்டாரா” பாணியில் கொரோனா பற்றி கேட்டு இருக்கிறார் கோமாவில் இருந்த இளைஞர் ஒருவர்.

இங்கிலாந்து நாட்டின் நாட்டிங்காம் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான ஜோசப் ஃப்ளேவில் ஒரு விளையாட்டு வீரர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் பர்டன் – ஆன் – ட்ரெண்ட் எனும் நகரத்தில் ஏற்பட்ட வாகன விபத்தின் போது ஜோசப் ஃப்ளேவில் படுகாயமடைந்தார். மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக கோமோ நிலைக்குச் சென்றார். அதன்பிறகு தான் இங்கிலாந்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் சுமார் 11 மாத சிகிச்சைக்குப் பிறகு ஜோசப்புக்கு நினைவு திரும்பத் தொடங்கி கை, கால்களை அசைக்கத் தொடங்கியுள்ளார்.
பெற்றோர் மற்றும் மருத்துவர்கள் கேட்கும் கேள்விகளுக்குச் சிறிது சிறிதாகப் பதில் அளிக்கத் தொடங்கியுள்ளார். அவருக்கு கொரோனா இருந்ததால் நேரடியாக வர முடியாத பெற்றோர் வீடியோ காலில் பேசி ஊரடங்கு பற்றி கூறி இருக்கின்றனர். இதைக் கேட்டு நம்ப முடியாமல் முழித்து இருக்கிறார் ஜோசப். அதன் பிறகு ஒரு வருடம் உலகில் நடந்த நிகழ்வுகள் பற்றி மருத்துவர்களும் நண்பர்களும் தெரிவித்து இருக்கின்றனர். இதை எல்லாம் நம்ப முடியாமல் விழி பிதுங்கி இருக்கிறார் ஜோசப். கோமா நிலையில் இருந்து விழித்துக் கொண்ட ஜோசப் இதையெல்லாம் தெளிவாக புரிந்து கொள்ள சில காலம் பிடிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.




