உலகம் முழுவதும் பரவும் கொரோனா நோய்க்கு இது வரை மருந்து கண்டுபிடிக்க படவில்லை அனைத்து நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் முழு முனைப்பு காட்டி வருகின்றன.

இந்த நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் பிரபல மருந்து தயாரிக்கும் நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகா இணைந்து ஒரு கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, அது தற்போது மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
இந்த அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் ஆஸ்திரேலிய அரசு, அந்த தடுப்பூசிக்காக 18 மில்லியன் அமெரிக்க டாலர் (அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.135 கோடி) ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது

இதுபற்றி அந்த நாட்டின் பிரதமர் நேற்று கூறும்போது, “ ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, உலகின் மிக முன்னேறிய மற்றும் நம்பிக்கைக்குரிய தடுப்பூசி ஆகும். இதற்காக நாம் ஒப்பந்தம் போட்டுள்ளோம். இந்த தடுப்பூசி ஒவ்வொரு ஆஸ்திரேலியருக்கும் கிடைக்கும்” என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “ இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற சோதனை வெற்றி அடைந்ததும், நாம் அதை உற்பத்தி செய்வோம். அதன்மூலம் நாமே வினியோகிக்கலாம். மேலும் 25 மில்லியன் ஆஸ்திரேலிய மக்களுக்கு அந்த தடுப்பூசி இலவசமாக போடப்படும்” என அறிவித்துள்ளார்.




