இங்கிலாந்தை சேர்ந்த 21 வயதான ஆம்பர் கும்பர்லேண்ட் என்ற பெண், உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தையை பெற்று எடுத்து சாதனை படைத்து உள்ளார்.
மருத்துவ அறிவியல் விதிகளின்படி, பிறக்கும் குழந்தைகளின் சராசரியான அதிகப்ட்ச எடை என்பது 7.5 பவுண்டுகள் அதாவது 3.4 கிலோ தான் ஆகும். இதில் 0.6 பவுண்டு வரை ஏற்றத்தாழ்வு இருப்பது சாதாரண நிகழ்வு தான் ஆகும். இந்த விவகாரத்தில் சில அசாதாரண நிகழ்வுகளும் அவ்வப்போது நடைபெறுவது உண்டு.
இங்கிலாந்தில் ஒரு பெண் 12 பவுண்டுகள் மற்றும் 14 அவுன்ஸ் அதாவது 5.8 கிலோ எடையுள்ள பெண் குழந்தையை மெற்றெடுத்து உள்ளார். இது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தை சேர்ந்த 21 வயதான ஆம்பர் கும்பர்லேண்ட் என்ற இளம்பெண்ணின் வயிறு மிகப்பெரியதாக இருக்கவே, இரட்டைக் குழந்தைகள் பிறக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கருதினர்.
ஆனால், 5.8 கிலோ எடையில் ஒரு பெண் குழந்தை மட்டுமே பிறந்தது. இதற்கு எமிலியா என்று பெயரிட்டு உள்ளனர். 2012 ஆம் ஆண்டில் இதைவிட 2 பவுண்டுகள் மட்டுமே கூடுதலாக எடையுடன் பிறந்ததே, உலகின் அதிக எடையுடன் பிறந்த முதல் குழந்தை என்ற சாதனையை படைத்து உள்ளது. எமிலியா, வழக்கமாக 36 வாரங்கள் கால அளவில் குழந்தைகள் பெறும் உடல் வளர்ச்சியை, 32 வார கால அளவிலேயே பெற்றிருந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.