காத்மாண்டுவில் சீனா எல்லைகளை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருகிறது,ஆனால் நேபாள பிரதமர் ஷர்மா ஒலி இதனை கண்டுக்கொள்ளாமல் மவுனமாக இருக்கிறார்
நேபாள விவசாயத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில், எல்லையில் அமைந்துள்ள பல மாவட்டங்களில் , பல இடங்களில், நேபாளத்திற்கு சொந்தமான நிலத்தை சீனாஆக்கிரமித்திருப்பது தெரியவந்துள்ளது.சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிந்திருந்தாலும், அதனை கண்டுகொள்ளாமல் மறைக்கும் முயற்சியில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது.
நேபாளத்தில் ஆக்கிரமித்த நிலத்தில் சாலைகள் அமைத்துள்ள சீனா, தொடர்ந்து மேலும் சில பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனை அறிந்துள்ள நேபாள பிரதமர் ஷர்மா ஒலி, சீனா அதிருப்தியை எதிர்கொள்ள அஞ்சி, ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேபாளத்தின் போலகா, கோர்கா, தர்சுலா, ஹூம்லா, சிந்துபல்சவுக், சன்குவஸ்பா மற்றும் ரசுவா மாவட்டங்களில் சீனா ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. டோலகாவில் சர்வதேச எல்லை பகுதியில் 1,500 மீட்டர் தூரம் சீனா ஆக்கிரமித்துள்ளது. டோலகாவின் கோர்லாங் பகுதியில் இரு நாடுகள் எல்லையில் அமைந்துள்ள தூண் எண் 57 ஐ அகற்றியுள்ளது. அதேபோல் கோர்கா மாவட்டத்தில் அமைந்துள்ள எல்லை தூண்களையும் சீனா அகற்றியுள்ளது.கோர்காவின் பல கிராமங்களை சீனா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.
அதேபோல் டர்சவுலா மாவட்டத்தில் உள்ள ஜியுஜியு கிராமத்தில் சில பகுதிகளை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நேபாளத்தில் இருந்த ஏராளமான வீடுகளை சீனா ஆக்கிரமித்துள்ளது. ஆறுகள் அமைந்துள்ள மாவட்டங்களில், அதன் அருகில் தான் சீனா ஆக்கிரமிப்பு செய்து வருகிறது.
சீனாவின் ஆக்கிரமிப்பை தடுக்க, அரசு தடுக்க வேண்டும் என அந்நாட்டு பார்லிமென்டின் கீழ்சபையில் எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர். 1414,88 கி.மீ., எல்லைகளை சீனா ஆக்கிரமித்துள்ளதாக குற்றம்சாட்டினர்.