பெய்ஜிங்:சீனா அரசு கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.10,800 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகத்தையே மிரட்டி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு வழி தெரியாமல் உலக நாடுகள் அனைத்தும் திண்டாடிக் கொண்டிருக்கின்றன
ரஷ்யாவைத் தவிர மற்ற நாடுகளில் இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு சோதனை அளவிலேயே இருந்து கொண்டிருக்கின்றன. ரஷ்யா மட்டும் நாங்கள் மருந்து கண்டுபிடித்து விட்டோம் அதற்கான உற்பத்தியும் தொடங்கி விட்டோம் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது சீனாவும் கொரோனாக்கு மறந்து கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது சீன அரசு நிறுவனமான சினோபார்ம் நிறுவனம் Ad5-nCoV என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது இதுகுறித்து சினோபார்ம் நிறுவனத்தின் தலைவர் லியூ ஜிங்ஷென் தெரிவித்துள்ள விவரங்கள் பின்வருமாறு

இந்த தடுப்பூசியை இரண்டு முறை போட்டுக் கொள்ள வேண்டும் முதல் ஊசி போட்டுக்கொண்ட நாளிலிருந்து 28 நாட்கள் கழித்த பிறகு அடுத்த ஊசியை நாம் போட்டுக் கொள்ள வேண்டும் சீனாவில் உள்ள அனைத்து மக்களும் இந்த தடுப்பூசியை கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் . முதல் கட்டமாக நகரங்களில் உள்ள சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பு ஊசிகள் போடப்படும் மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள கிராமங்களில் தற்போது தடுப்பூசி போடுவதற்கான அவசரமும் அவசியமும் இல்லை .

நான் இந்த ஊசியை இரண்டு முறையும் போட்டுக் கொண்டு உள்ளேன் முதல் ஊசி செலுத்தி 28 நாட்கள் கழித்து இரண்டாம் முறையும் எனக்கு செலுத்தப்பட்டது இதுவரை எனக்கு எந்த பக்கவிளைவுகளும் அதனால் ஏற்படவில்லை.அதுமட்டுமின்றி முதல் தடுப்பு ஊசி செலுத்திய உடனேயே உங்களுடைய 97 சதவீத பாதுகாப்பு உறுதியாகிவிடும் உங்கள் உடலில் ஆன்டிபாடிகள் அதிகரிக்கத் தொடங்கிவிடும்.

இரண்டாவது முறையும் இதை போட்டுக் கொள்வதால் 100 சதவீத பாதுகாப்பு அடைந்து விடுவோம் ஒருமுறைக்கு நாலு மைக்ரோகிராம் மருந்து உங்கள் உடலுக்குள் செலுத்தப்படும் இந்த மருந்தின் தற்போதைய விலை ஆயிரம் யுவான் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் இறுதிக்குள் உங்கள் அனைவருக்கும் இது கிடைத்துவிடும் என்று லீவ் ஜங்ஷன் தெரிவித்துள்ளார் .
ஆயிரம் யுவான் என்பது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 10800 ரூபாயாகும் .




