மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், பதிவிட்டுள்ள பள்ளி கால புகைப்படம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக அரசின் அமைச்சரவையில் மிக முக்கியமானவர் ஜெயக்குமார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரியவராக இருந்து வந்த இவர், 5 முறை ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை அறிவியலும், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பும் படித்துளளார். பேச்சில் கெட்டிக்காரரான ஜெயக்குமார் விளையாட்டிலும் அதிக ஆர்வம் கொண்டவர். குத்துச்சண்டை போன்ற விளையாட்டிலும் அவர் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், ” தனது ட்விட்டர் பக்கத்தில் பள்ளி பருவத்தின் போது
உடற்பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படமொன்றை வெளியிட்டு “பள்ளியில் பலு தூக்கும் போட்டியில் பங்கு கொண்டபோது… #நினைவுகள் #உடல்பலமேமனபலம்” என குறிப்பிட்டு ஜெயக்குமார் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி உள்ளது.
கட்டு மஸ்தான உடல் வாகுவுடன் அமைச்சர் ஜெயக்குமார் பளு தூக்கும் அந்த புகைப்படம் இணையத்தில் அதிகளவில் பரவ, இது அமைச்சர் ஜெயக்குமாரா என ஆச்சரியம் கலந்த சந்தேகத்துடன் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.