தனது அப்பா போல் வளரவேண்டும் என்று ஆசைப்பட்டதால் 55 லட்சம் செலவு செய்து 5 செ.மீ வளர்ந்துள்ளார்.
அமெரிக்கா:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாசில் வசித்து வருபவர் அல்போன்சோ புளோரஸ். கல்லூரியில் படித்துவரும் அல்போன்சோ பகுதி நேர எழுத்தாளராகவும் பணியாற்றிவருகிறார். இவருக்கு சிறு வயது முதலே மற்றவர்களை விட உயரத்தில் அதிகமாக இருக்க வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது. இதன் காரணமாக காஸ்மாட்டிக் லைம்ப் அறுவை சிகிச்சை செய்து கொண்டு 5 அடி 11 இன்ச் உயரத்திலிருந்து 6 அடி 1 இன்ச் உயரத்துக்கு ஏழு மாதங்களில் வளர்ந்துள்ளார். இதற்காக இந்திய மதிப்பில் சுமார் 55 லட்சம் செலவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லாஸ் வேகாசில் உள்ள தி லிம்ப் பிளாஸ்ட்எக்ஸ் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரியும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கெவின் டெபிபர்ஷாட் என்ற மருத்துவர் இவருக்கு இந்த கடினமான அறுவை சிகிச்சையை செய்துள்ளார். ஏழு மாதங்களாக மேற்கொண்ட தொடர் சிகிச்சையின் விளைவாக அல்போன்சா 6 அடி உயரத்திற்கு வளர்ச்சி அடைந்துள்ளார்.
Read more – மாஞ்சோலையில் ஒரே ஒரு 10 ம் வகுப்பு மாணவருக்காக திறக்கப்பட்ட அரசு பள்ளி : பொதுமக்கள் நெகிழ்ச்சி
இதுகுறித்து அல்போன்சோ புளோரஸ் மகிழ்ச்சியாக கூறுகையில், நான் ஏற்கனவே இருந்த 5 அடி 11 இன்ச் என்பது நல்ல உயரம் என்பதை அறிவேன்.நான் விரும்பும் கூடைப்பந்து ஹீரோக்களும் உயரமானவர்களாக இருக்கிறார்கள். என் தந்தையும் நல்ல உயரம் தான். அதனால், நானும் அவர்களைப் போல உயரமாக இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு இந்த அறுவை சிகிச்சையை செய்துள்ளேன் என்றார். மேலும், இந்த முடிவிற்கு எனது குடும்பத்தினரும் நண்பர்களும் அச்சம் அடைந்தனர்.ஒரு சிலர்என்னை பைத்தியம் என்று கூறினர். ஆனால் நான் ஹீரோவாக இருக்க விரும்பினேன். அதை இப்போது நிறைவேற்றியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.