உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் இன்னும் 2 ஆண்டுகளுக்குள் கொரோனா தொற்றினை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவல் இன்னும் 2 ஆண்டுகளில் முழுமையாக நீங்கிவிடும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொரோனா வைரஸ் கடந்த 1918 ஆம் ஆண்டில் இருந்த வைரஸை விட தற்போது பல மடங்கு அதிகமாக உள்ளது என்றும், உலகமாயக்கலே கொரோனா வேகமாக பரவுவதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த இக்கட்டான சூழலில், உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் கொரோனாவினை ஒழித்துவிட முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறிய அவர், தற்போது வரை கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர். ஒரு வேளை விரைவில் கொரோனா தடுப்பு மருந்து அங்கீகரிக்கபட்டால் அதனை அனைத்து நாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.




