உலக அளவில், அதிக அளவு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்த நாடுகளில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பின், டிரம்ப் நேற்று அளித்த பேட்டியில், கொரோனா வைரஸை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை உணர்ந்துள்ளோம். உலக நாடுகளுக்கும் நாம் உதவி செய்து வருகிறோம்.இந்த வைரஸ் தொடர்பாக பல புதிய விஷயங்களை கற்றுள்ளோம்.இந்த வைரஸ் யார் யாரை தாக்கும், யாருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை கண்டறிந்துள்ளோம். அதற்கேற்ப சிகிச்சை அளித்து வருகிறோம். அமெரிக்காவில், இதுவரை, 1.40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 38 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்பில் இருந்து அமெரிக்கா மீண்டு வருகிறது. ஒரு சில இடங்களில் வைரஸ் பாதிப்பு உள்ளது. அதை சமாளிக்கும் வழிமுறைகளை வகுத்துள்ளோம்.இந்த வைரசுக்கு மிக விரைவில் தடுப்பூசியை கண்டுபிடிப்போம் என, உறுதி கூறுகிறேன்.சர்வதேச அளவில், அமெரிக்காவில் தான் அதிக அளவில் பரிசோதனை செய்யப்பட்டுஉள்ளது.இதுவரை, ஐந்து கோடி பேருக்கு பரிசோதனை செய்துள்ளோம். அதற்கடுத்து இந்தியாவில் தான், அதிகபட்சமாக, 1.2 கோடி பேருக்கு பரிசோதனை செய்துள்ளனர் என ட்ரம்ப் கூறினார்