
இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லும் பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் அவர்கள் தடுப்பூசி செலுத்தப்படாத அவர்களாகவே கருதப்படுவார்கள். இந்தியாவிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் மூன்று கட்ட பரிசோதனை மற்றும் 10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்துதல் இருக்க வேண்டும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
பிரிட்டன் கொள்கைபடி ஆஸ்ட்ரோஜெனிகா, மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே முழுமையான தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாகக் கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




