ட்விட்டர், இன்ஸ்டாகிராமை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளை யூடியூப் நிறுவனமும் நீக்கியது.
வாஷிங்டன் :
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் வெற்றிபெற்றார். வருகின்ற ஜனவரி 20 ம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் அமெரிக்காவின் 46 வது அதிபராக பதவி ஏற்கவுள்ளார்.
தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப் ஜோ பைடனின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டி வந்தார். தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் டிரம்ப் மாகாண தேர்தல் அதிகாரிகளிடம் தனக்கு அதிக வாக்குகள் கிடைக்க ஏற்பாடு செய்யும் படியும் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் படியும் பேசிய ஆடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Read more – ஜெயலலிதாவுடன் துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா : முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேச்சு
ஜோ பைடன் தேர்தலில் வெற்றியை எதிர்த்து கடந்த ஜனவரி 6 ம் தேதி ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் காவல் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்த நிலையில், ஜோ பைடன் வரும் ஜனவரி 20 ம் தேதி பதவி பிரமாணம் செய்யவுள்ளதால் டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான வன்முறை வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு வந்த 70,000 க்கும் மேற்பட்ட கணக்குகளை தற்காலிகமாக ட்விட்டர் நிறுவனம் முடக்கியது.
கடந்த வாரம் ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக நீக்கிய நிலையில் தற்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை யூடியூப் நிறுவனம் நீக்கியது. ட்விட்டர், இன்ஸ்டாகிராமை தொடர்ந்து யூடியூப் நிறுவனமும் டிரம்பின் மீது நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.