சைப்ரஸ் நாட்டில் மணப்பெண் தலையில் 23,000 அடி நீளத்தில் ரீத் எனப்படும் வெள்ளைத்துணியை அணிந்து சாதனை படைத்துள்ளார்.

கிறிஸ்தவ முறைப்படி நடக்கும் திருமணங்களில் மணப்பெண் தலையை மூடியவாறு ஓர் துணியை அணிந்திருப்பது வழக்கம். மெல்லிய துணியிலான இதை தரையில் தவழத் தவழ இரண்டு பேர் பிடித்தபடி தான் மணப்பெண் மேடைக்கு வருவார். சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்த துணிக்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார். அவர் திருமணத்தில் தலையில் அணிந்திருந்த துணியின் நீளம் 23,000 அடியாம். கிட்டத்தட்ட 64 கால்பந்து மைதானங்களின் நீளம். இதில் எல்லாமா சாதனை என்று திருமணத்திற்கு வந்தவர்கள் வாய்பிளந்தனர்.




