இலங்கையில் மின் கட்டணம் 246% உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதாரப்பிரச்சனை, வேலையில்லா திண்டாட்டம் பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளமுடியாமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இலங்கை மின்சார வாரியம் 264% மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
நஷ்டத்தில் இயங்கும் மின்சார வாரியத்தை லாபத்தில் இயங்க வைக்க மின் கட்டணங்களை 800% உயர்த்த வேண்டும் என மின்சார வாரியம் கோரிக்கை விடுத்தது. ஆனால், அதை நிராகரித்த அரசு அதிகபட்சமாக 264% உயர்த்திக்கொள்ள அனுமதி அளித்தது. இதையடுத்து மின்கட்டண உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த மின்கட்டண உயர்வால் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள்.
மின் கட்டண உயர்வின்படி,
*தற்போது, யூனிட் ஒன்றுக்கு ₹2.50 வசூலிக்கப்பட்டு வந்த மின்சாரம் இனி ₹8 வசூலிக்கப்படும்.
*30 யூனிட்டுகளுக்குக் கீழே பயன்படுத்துவோருக்கு இனி 264% மின் கட்டண உயர்வு அமலாகும்.
*30-60 யூனிட் வரை பயன்படுத்துவோர் இனி 211% மின் கட்டண உயர்வு செலுத்தவேண்டும்.
*60-90 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 125% அதிகரிக்கும்.
*உணவு, எரிபொருள், மருந்து போன்ற மிக அத்தியாவசியமான இறக்குமதிக்கு கூட நிதியளிக்கமுடியாமல் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டு வருகிறது.