சீனாவில் கொரோனா வைரஸ் போன்று ’லங்யா’ (Langya) என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள ஷண்டங் மற்றும் ஹனன் மகாணத்தில் இந்த வைரசால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்றியிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
லங்யா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள்:
உடல்சோர்வு
குமட்டல்
தசைப்பிடிபு
ஜுரம்
பசியின்மை
இருமல்
தலைவலி
கிழக்கு சீனாவில் திடீர் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்த இந்த வைரஸை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆடுகள் மூலம் 2%ம், நாய்கள் மூலம் 5%ம் பரவுவதாக கூறுகின்றனர்.லங்யா வைரஸ் பெரும்பாலும் மனிதர்களை தாக்கி கிட்னியை செயலிழக்க செய்வதாக கூறுகின்றனர். முன்னதாக, வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் 2019ம் ஆண்டில் இந்த வைரஸ் முதன்முதலாக மனிதர்களில் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.