பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் துக்கம் அனுசரிப்பு 10 நாட்களுக்கு நடைபெறும் என்று பக்கிகாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 96. இதையொட்டி பக்கிங்காம் அரண்மனை 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. பத்தாவது நாளில் அவர் மரபின்படி வெஸ்மினிஸ்ட்டர் அபேயில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளார்.
லண்டனுக்கு ராணியின் உடல் கொண்டுவரப்பட்டு நான்கு நாட்களுக்கு வெஸ்ட் மினிஸ்ட்டர் அரங்கில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்படுகிறது.பின்னர் பக்கிங்காம் அரண்மனையில் இருந்து அவர் உடல் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அவர் பல ஆண்டுகள் வாழ்ந்த வெஸ்ட்மினிஸ்டர் பகுதியில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும். மன்னர் சார்லஸ் உள்பட அரச குடும்பத்தினர் இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள உள்ளனர். ராணுவத்தினர் அணிவகுப்புடன் இறுதி ஊர்வலம் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், “பொதுவாழ்க்கையில் கண்ணியத்தையும், நாகரிகத்தையும் கடைப்பிடித்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.




