பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபரின் முகத்தின் ஒரு பக்கம் முழுமையாக செயலிழந்துவிட்டதாக, அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.
பாப் உலகில் வெறும் 15 வயதில் உலகளவில் பிரபல பாடகராக மாறியவர் ஐஸ்டின் பீபர். தற்போது 28 வயதாகும் பீபர் இஸ்ட்கிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு ராம்சாய் ஹண்ட் சின்ட்ரோம் என்கிற குறைபாடு ஏற்பட்டுள்ளதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த பாதிப்புள்ளவர்களுக்கு முகத்தின் ஒரு பக்கம் செயல்படாது. அதாவது இதை முகப் பக்கவாதம் என்றும் குறிப்பிடலாம். அந்த வீடியோவில் தனக்கு முக்த்தின் ஒரு பக்கத்தை அசைக்க முடியவில்லை, கண்ணின் இமையை திறந்து மூட முடியவில்லை. பேசுகையில் வாயின் ஒரு பக்கம் இயங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தீவிரமாக இருக்கும் இந்த பிரச்னை காரணமாக எந்த இசை நிகழ்ச்சியும் நடத்த முடியாது. இதை ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தற்போதைக்கு முகத்துக்கான உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் நலம் பெறுவேன் என்று ஜஸ்டின் பீபர் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து ரசிகர்கள் பலரும் அவருடைய உடல்நிலை மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டுவதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.