
திருப்பதி கோயில் மாட வீதிகளில் செருப்புடன் வலம் வந்தது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் மன்னிப்புக் கோரி திருப்பதி கோயில் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 9-ம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் சென்னை மாமல்லபுரத்திலுள்ள தனியார் விடுதியில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
திருமணம் முடிந்தவுடன் கடந்த 10-ம் தேதி இருவரும் திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து மாட வீதிகளில் இருவரும் போட்டோஷூட் மேற்கொண்டனர். அப்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும், அவர்களுடன் போட்டோ எடுக்க வந்த நபர்களும் காலணிகள் அணிந்திருந்தனர்.
இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் திருப்பதி கோயில் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூட்டம் குழப்பமாக இருந்த காரணத்தால் செருப்பு அணிந்திருந்ததை நாங்கள் யாரும் உணரவில்லை. இதனால் மன வருத்தம் அடைந்தவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக விக்னேஷ் சிவன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.