தங்களது வண்டியில் வரும் பயணிகளுக்கு மாஸ்க் செல்பி சரிபார்ப்பு அம்சத்தை உபெர் இன்னும் செயல்படுத்தி வருகிறது!

சென்ற மே மாதத்தில் வண்டி ஓட்டுநர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட செல்ஃபி முறை டிரைவர்கள்முகக்கவசம் அணிந்து இருக்கிறார்களா என்பதை பரிசோதிக்க உலகளவில் அறிமுகப்படுத்துவதாக உபெர் நிறுவனம் தெரிவித்துள்ளது. பின்பு மே 18 ஆம் தேதி அன்றுஉபெர் தங்களது புதிய கொள்கையான “நோ மாஸ்க் நோ ரைடு” (No Mask No Ride) எனும்திட்டத்தை அறிமுகப்படுத்தியது மற்றும் இப்போது நிலவும் தொற்றுநோய் பரவலால் இந்த கொள்கையைக் காலவரையின்றி நீட்டிக்க முடிவு எடுத்துள்ளது.

இதில், இந்தத் திட்டத்தின் தொடர்ச்சியான அம்சமாக டிரைவர்கள் மற்றும் ரைடர்ஸ் இருவரும் பயணம் மேற்கொள்ளும்போது அனைத்துநேரங்களிலும் முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளது. டிரைவர்கள் தங்கள் பணியை தொடங்குவதற்கு முன் ஒவ்வொரு நாளும் முக கவசத்துடன் ஒரு செல்ஃபி எடுத்து அனுப்பு வேண்டும், இதே நேரத்தில்நேரத்தில் டிரைவர்கள்மற்றும் பயணிகள் மற்றவர் முக கவசம் அணியவில்லை என்று புகாரளித்தால் எந்த அபராதம் இன்றி பயணத்தை உடனே ரத்து செய்ய முடியும். இது போன்றவிதிமுறைகளுக்கு கீழ்ப்படிய தவறினால் அவர்களின் கணக்கு செயலிழக்க நேரிடும் என்றும் உபெர் அறிவுறுத்தியுள்ளது.

பயணிகள் செல்பி அம்சம் செப்டம்பர் முடிவதற்குள் கனடா மற்றும் அமெரிக்காவிலும், அதற்குப்பின் லத்தீன் மற்றும் பிற பிராந்தியங்களிலும் செயல்படுத்தப்படும் என்று உபெர் அறிவித்துள்ளது. டிரைவர்களை போல் இல்லாமல், பயணிகள் பயன்பாட்டில் ஒரு பயணி முகக்கவசம் அணியாமல் இருக்கும்பொழுது ஒரு டிரைவர் புகார் தந்தால் மட்டுமே இந்த செயலி செல்ஃபி எடுக்கும் படி அறிவுறுத்தும்.
குரோனா தொற்று பரவும் போது, உபெரின் மிகப்பெரிய சந்தையான அமெரிக்காவில் வாடகை- கார்சவாரி பயணங்களுக்கான தேவை மிகவும் குறைந்துள்ளது.
இதில் மே மாதத்தில் இருந்து அனைத்து உபெர் பயணத்திலும் சுமார் 99.5% டிரைவர்அல்லது பயணி மாஸ்க் அணியவில்லை என்ற புகார்கள் வராமல் முடிந்துள்ளதாக உபெர் கூறியுள்ளது.




