கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக, ஜெர்மனியில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், கடந்த சில தினங்களாக அங்கு தொற்று பரவல் அதிகரிது வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 900 பேருக்கு அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதிப்பால் 7 உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, ஜெர்மனியில் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில், கடந்த ஏப்ரல் முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற கட்டுப்பாடுகள் மக்களிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், வைரஸ் பரவலுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு ஜெர்மனி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். தலைநகர் பெர்லினில் திரண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் , கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்திய படி ஊர்வலமாக சென்றனர். கூட்டத்தில் ஒரு சிலர் தவிர, பெரும்பலனோர் மாஸ்க்கை தவிர்த்து இருந்தனர்.
ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிலர் எங்கள் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்று கூச்சலிட்டனர். ஊர்வலத்தில் பொதுமக்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலதரப்பினரும் கலந்து கொண்டனர். மாஸ்க் அணிய வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளும் தங்களின் தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆதங்கப்பட்டனர்.
இதனிடையே, 20 ஆயிறத்திற்கும் அதிகமானோர் போராட்டத்தில் பன்ஹகுபெற்றதாகவும், கட்டுப்பாடு விதிகளுக்கு எதிராக போராட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.




