இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா தாண்டனை அமெரிக்க நிதி நிலைக்குழு தலைவராக நியமிக்க டிரம்ப்பின் குடியரசு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் அந்நாட்டின் அதிபராக வரும் ஜனவரி மாதம் பதவியேற்க உள்ளார்.தனது ஆட்சிக்கு முக்கிய பதவிகளுக்கு தேவையான ஆட்களை நியமித்து வரும் பைடன்,கமலா ஹாரிஸ் உள்பட தனது நிர்வாகத்தின் சில முக்கிய பொறுப்புகளுக்கு இந்திய வம்சாவளியினரை தேர்வு செய்து வருகிறார்.
இந்த நிலையில்,வெள்ளை மாளிகையின் அதிகாரமிக்க பதவியான மேலாண்மை மற்றும் நிதி குழுவின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான நீரா தாண்டனை நியமிக்க ஜோ பைடன் முடிவு செய்துள்ளார்.ஆனால், அமெரிக்க நிதி நிலைக்குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் செனட் சபை வாக்கெடுப்பில் ஒப்புதல் பெறவேண்டியது அவசியமாகும்.
குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட்சபை உறுப்பினர்கள் பலரும் இவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த ஆட்சி காலங்களில் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் குடியரசு கட்சியின் செனட் சபை உறுப்பினர்களை கடுமையான சொற்களால் நீரா தாண்டன் விமர்சனம் செய்துள்ளார்.இதனால், செனட் உறுப்பினர்களின் ஆதரவு நீரா தாண்டன் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.




