SAMSUNG செல்போன் நிறுவன அதிபர் லீ குன்ஹீ இன்று உயிரிழந்தார். அவருக்கு அந்நாட்டு மக்களும் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இன்றைய நவீன உலகம் செல்போனில் மூழ்கிவிட்டது. தொழில்நுட்பத்தின் சகல வசதிகளுக்கும் மக்களைப் பழக்கப்படுத்திவிட்டது.
.ஆனால் இந்த உயர் தொழில்நுட்பச் சாதனங்கள் எத்தனயோ ஆண்டுகளுக்கு முன் ஒருவரின் கனவில் மிதந்து அது மெய்ப்பொருளாக அவர் உழைத்து மக்களின் கையில் அது வெற்றிப் பொருளாக மாற எத்தனை கடின உழைப்பை அவர் கொடுத்திருப்பார்?
அந்த வகையில் உலகில் பெரும்பாலான நாடுகளின் உள்ள மக்களின் விருப்பமான பிராண்டாக தென்கொரிய நாட்டைச் சேர்ந்த Samsung உள்ளது. இதன் விற்பனையும் வியப்பளிக்கும் வகையில் உள்ளது.
தற்போதைய உலகளாவிய தொழில்நுட்பச் சந்தையைப் பிடித்தவர் லீ குன்ஹீ. இவர் தனது தந்தையின் மரணத்திற்குப் பின் சாம்சங் நிறுவனத்தின் தலைவர் ஆனார்.

ஆரம்பத்தில் தொலைக்காட்சிகளை குறைந்த விலைக்கு மக்கள் மனதில் இடம்பிடித்த சாம்சங் இன்று தொழில்நுட்பம் சாராத பொருட்களில் தொடாத உச்சம் இல்லை.
அதன்வளர்ச்சி 1990 ஆண்டிகளில் மைக்ரோ சிப்புகளில் கவனம் செலுத்தி வெற்றி பெற்றது.
பின்னர் லீ குன் ஹீ கடந்த 1998 ஆம் ஆண்டுகளில் அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியானார். அதன்பின் சாம்சாங் நிறுவன பிராண்ட் உலகளவில் பிரபலமடைந்தது.
இந்தியாவில் பல ஆண்டுகளாக செல்போனில் நம்பர் ஒன் பிராண்டாக இருந்தது
எத்தனையோ விமர்சனங்கள்,ஊழல்புகார் ( 1996 ஆண்டு ), வரிஏய்ப்பு புகார் என குற்றங்கள் லீ குன் ஹூ மீது சுமத்தப்பட்டாலும் அதிலிருந்து மீண்டார்.

சாம்சங் இன்றும் பல முன்னணி நிறுவனங்களுடன் போட்டிபோட்டு சந்தையில் தனக்கெனச் சிறப்புடன் இருக்க அவரது நிர்வாகத்திறனும் காரணம்.
இந்நிலையில் லீ குன் ஹீ நுரையீரல் புற்றுநோய் காரணமாகப் பாதிக்கபட்டு அதிலிருந்து மீண்டார். இந்நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்ததாக சாம்சாங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவருக்கு வயது 78 ஆகும். அந்நாட்டு மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.




