அமெரிக்காவில் டிக்டாக் மற்றும் வீ சாட் ஆகிய இரண்டு செயலிகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளதாவது,
டிக்டாக் மற்றும் வீ சாட் ஆகிய இரண்டு செயலிகளுக்கும் அமெரிக்காவில் தடை விதிக்கப்படுகிறது. இதன் மீதான கட்டுப்பாடு இன்னும் 45 நாட்களில், அதாவது செப்டம்பர் மாத மத்தியில் அமலுக்கு வரும் என்றும், மேலும் இதன் உரிமையாளர்களுக்கு எதிராக ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டிக்டாக், அமெரிக்க அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் இருப்பிடங்களைக் கண்காணிக்கவும், தனிப்பட்ட தகவல்களை எடுத்து அவர்களை மிரட்டவும் வழிவகுக்கும் எனவும், இவை அமெரிக்காவின் பாதுகாப்பிற்கும், பொருளாதாரத்திற்கும் அச்சுறுத்தலை தருவதாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு பயனளிக்கும் வகையில், தவறான பிரச்சாரங்களுக்கு இந்த செயலிகள் பயன்படுத்தப்படலாம் எனவும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.எனவே, இவ்விரண்டு செயலிகளுக்கும் அமெரிக்காவில் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட 106 செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட போது, அதிபர் டிரம்ப் வரவேற்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




