கடந்த 1-ம் தேதி அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனை யடுத்து, இருவரும் தனிமைப்படுத்திக்கொண்டனர்.
வைரஸ் தாக்கம் தீவிரமடைந்ததையடுத்து, அதிபர் டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெள்ளைமாளிகையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது அவர் தான் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்ட்டதாக தெரிவித்து வருகிறார். ஆனால், அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா கொரோனா பாதிப்பில் இருந்து இன்னும் குணமடையவில்லை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்தநிலையில், அதிபர் டிரம்ப்-மெலனியாவின் மகன் பரோன் டிரம்பிற்கு கொரோனா தொற்று பரவியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. 14 வயது சிறுவனானா பரோனுக்கு எப்போது வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது என்பதை மெலனியா டிரம்ப் வெளியிடவில்லை.
பரோனுக்கு கொரோனா வைரஸ் பரவியதாகவும், ஆனால் தற்போது அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாகவும் மெலனியா டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காகவே பரோன் டிரம்பிற்கு வைரஸ் தொற்று பரவிய தகவலை முதலிலேயே வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து பரோன் டிரம்ப் எப்போது குணமடைந்தார் என்ற தகவலும் இன்னும் வெளியிடப்படவில்லை.