மாணவிகள் ₹1,000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ₹1,000 வழங்கும் திட்டம் இந்த ஆண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற இதுவரை 4 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க மேலும் இரண்டு நாட்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குதல்,வங்கி கணக்கு விவரங்களில் திருத்தம் இருப்பின் அதனை மேற்கொள்ளுதல், புதிதாக வங்கி கணக்கு தொடங்குதல் போன்ற காரணங்களுக்காக இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காத மாணவிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-பா.ஈ.பரசுராமன்.




