தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 22 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இன்றும் நாளையும் கனமழை பெய்யும்.
நேற்று காலை நிவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் நீடாமங்கலத்தில் 11 செ.மீ மழை பெய்துள்ளது.வேதாரண்யம், நாமக்கலில் 10 செ.மீ அதிராம்பட்டினம், ஜெயங்கொண்டத்தில் 9 செ.மீ மழையும் பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.