தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலைஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில், இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேமூட்டத்துடனும், சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெயக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




