வடக்கு சிக்கிமில், வழி தவறி நின்ற 3 சீனர்களை மீட்டு, உணவு மற்றும் ஆக்சிஜன் அளித்து, பத்திரமாக அவர்களது இருப்பிடம் செல்ல உதவியுள்ளனர், நம் இந்திய ராணுத்தினர். இந்த சம்பவம், இந்தியரின் பண்புகளை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

வடக்கு சிக்கிமில், ஒரு பெண் உட்பட 3 சீனர்கள், தாங்கள் வசிக்கும் இடத்திற்கு, திரும்பிக் காரில் சென்றுக் கொண்டிருக்கும் போது, வழிதவறி விட்டனர். வெப்பம் ஜீரோ டிகிரிக்கு கீழே இருக்கும், சுமார் 17,500 அடி உயர மலையில், கடும் குளிரில் சிக்கிக்கொண்டுள்ளனர் இவர்கள்.
இதுக்குறித்து, தகவலறிந்த இந்திய ராணுவத்தினர், உடனடியாக அந்த மலைப்பகுதிக்கு சென்று, அங்கு ஆபத்தான நிலையில், செய்வதறியாது திகைத்து நின்றுக் கொண்டிருந்த, 3 பேரையும் மீட்டு, உணவு மற்றும் குளிர் தாங்கும் உடைகளைக் கொடுத்ததுடன், அவர்களுக்கு ஆக்சிஜனும் அளித்து, பத்திரமாக அவர்களது வசிப்பிடம் செல்ல உதவியுள்ளனர்.

இந்திய – சீன எல்லையில் கடந்த ஒரு வாரமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சீன ராணுவம், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்து வரும் இந்தப் பதற்றமான சூழலில் கூட, இந்திய ராணுவம் 3 பேரையும் மனிதாபிமானத்துடன் மீட்டுள்ள சம்பவம், பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில், ஒரு சண்டையின் போது இந்திய வீரர்கள் 20 பேர், வீர மரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இதை எல்லாம் சீன நாட்டினர் மீது காட்டாமல், அவர்களை மிகுந்த மனிதாபிமானத்தோடு நடத்திய சம்பவம், இந்தியர்கள் யார் என்பதை அனைவருக்கு உணர்த்தி இருக்கும் என நம்புகிறோம். இந்தியர்கள் எல்லோரையும் அனைத்து போறவங்கனு நிரூபித்த, ராணுவ வீரர்கள்!!
இதுக்குறித்து, ராணுவத்தின் மக்கள் தொடர்பு கூடுதல் இயக்குனர், தனது டுவிட்டர் பக்கத்தில், படங்களுடன் “இந்திய ஆர்மிக்கு, மனிதநேயம் தான் முதன்மையானது” எனப் பதிவிட்டுள்ளார்.




