கூகுளில் செய்திகள் வெளியிடுபவர்களுக்கு நிதி அளிக்கப்தாக சுந்தர் பிச்சை அறிவிப்பு.
கூகுளில் செய்திகள் வெளியிடுபவர்களுக்கு நிதி அளிக்கப்தாக சுந்தர் பிச்சை அறிவிப்பு.
இண்டெர்காலம் என்னவெல்லாம் செய்யும் என்பது உதாரணம் இப்போது உலகில் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள். இதில் நல்லவைகளுமுண்டு, தீயவைகளுமுண்டு.
முதலில் நாளிதழ்களில் நாட்டுநடப்புகளைப் படித்துக்கொண்டிருந்த நிலைமைமாறி தற்போது ஆன்லைன் போர்டெல்கல், நாளிதழ்களை இருந்த இடத்திலிருந்தே படிக்க முடியும்.
தற்போது ஏராளமான போர்டெல்களும் முளைத்துவிட்டன. இந்நிலையில் கூகுளில் செய்திகள் வெளியிடுபவர்களுக்கு நிதியளிக்கப்படும் என்றும் இதற்காக கூகுள் நிறுவனம் ரூ.7500 கோடியை ஒதுக்கியுள்ளதாக, கூகுள் நிறுவனத்தில் தலைமைச்செயலதிகாரியும் இந்தியருமான சுந்தர் பிச்சை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வணிகம் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் தங்கள் தயாரிப்புகளை இனி கூகுளில் இலவசமாக விற்பனை செய்ய முடியும். அக்டோபர் நடுப்பகுதியில் இத்திட்டம் தொடங்கப்படும் எனவும் தரமான செய்திகளுக்குப் பணம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்காக கூகுள் நியுஸ் ஷேகேஷ் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அது ஜெர்மனியில் அறிமுகமாகிப் பின் இந்தியாவுகு வரும் என தெரிவித்துள்ளார்.
இதனால் ஆன்லைன் பயன்படுத்துவோரும், கூகுள் தேடுபொறியைப் பயன்படுதுவோரின் எண்ணிக்கை இனிவரும் காலத்தில் அதிகக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.